மிரட்டல் வழக்கு: எதிர்மனுதாரராக தடகள வீரர் மாரியப்பன் சேர்ப்பு

மிரட்டல் வழக்கு: எதிர்மனுதாரராக தடகள வீரர் மாரியப்பன் சேர்ப்பு
மிரட்டல் வழக்கு: எதிர்மனுதாரராக தடகள வீரர் மாரியப்பன் சேர்ப்பு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் தாயார் தொடர்ந்த வழக்கில், மாற்றுத் திறனாளி தடகள வீரர் மாரியப்பன் எதிர்மனு தாரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

தனது மகனின் மரணம் தொடர்பாக, மாரியப்பனுக்கு எதிராக அளித்திருந்த புகாரை திரும்பப் பெறக் கோரி மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், எனவே உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக்கோரியும் சதீஷ்குமாரின் தாயார் முனியம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், முன்பு விசாரணைக்கு வந்தது.  வழக்கில், மாற்றுத் திறனாளி தடகள வீரர் மாரியப்பன், வடுகம்பட்டியைச் சேர்ந்த யுவராஜ், சபரி ஆகியோர் ஆகியோர் ‌எதிர்மனு தாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இருசக்கர வாகனம் காரில் மோதியதால் ஏற்பட்ட தகராறில் மாரியப்பன் மிரட்டியதாகவும் சில தினங்களில் தனது மகன் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்ததாகவும் முனியம்மாள் குற்றம்சாட்டி வருகிறார்.‌

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com