\
அமைச்சர் ஷாஜகான்
அமைச்சர் ஷாஜகான்Pt web

”50-ஆண்டுகளில் திமுக துடைத்து எறியப்படும்” - அமைச்சர் ஷாஜகான் சர்ச்சை கருத்து! கண்டித்து போஸ்டர்கள்

50 ஆண்டுகளில் திமுக துடைத்தெறியப்படும் எனப் பேசியுள்ள அமைச்சர் ஷாஜகானுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாபாநாசம் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு.
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக தவெக வென்றிருந்தாலும், ஆட்சியமைப்பதற்கு போதிய இடங்கள் கிடைக்காத நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய ஆதரவளித்திருக்கின்றன. காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கேற்று இருக்கிறது. முதலில் வெளியில் இருந்து ஆதரவு எனத் தெரிவித்திருந்தாலும், பிறகு விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளும் தவெக அமைச்சரவையில் பங்கு பெற்றிருக்கின்றன. விசிக சார்பில் வன்னி அரசுக்கு சமூகநீதித்துறையும், ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜகானுக்கு சிறுபான்மை நலத்துறையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்தசூழலில் தான், 2 தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஷாஜகான் ’50-ஆண்டுகளில் திமுக துடைத்து எறியப்படும்’ என பேசினார். இவரது கருத்து சமூக வலை தளங்களில் பரவிய நிலையில், திமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றன.

ஒரு பகுதியாக பாபநாசம் பகுதிகளில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகானை கண்டித்தும், மன்னிப்பு கேட்க கோரியும் திமுக சார்பில் ஆங்காங்கே கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பாபநாசம் பகுதியில் ஒட்டப்பட்ட கண்டன போஸ்டர்கள் சில மணி நேரங்களிலேயே ஆங்காங்கே அப்புறப்படுத்தப்பட்டும், கிழிக்கப்பட்டும் காணப்பட்டது. அமைச்சர் ஷாஜகானை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டது, பாபநாசம் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது..

அமைச்சர் ஷாஜகான்
ஜூன் 18ல் சட்டமன்ற கூட்டத்தொடர்.. எம்எல்ஏ-கள் பயிற்சி முகாம்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com