\
2 வருடத்துக்கு பின் செஞ்சுரி போட்ட பாபநாசம் அணை

2 வருடத்துக்கு பின் செஞ்சுரி போட்ட பாபநாசம் அணை

2 வருடத்துக்கு பின் செஞ்சுரி போட்ட பாபநாசம் அணை
Published on

தொடர் மழை காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு பாபநாசம் அணை 100 அடியை எட்டியுள்ளது.

‌தொடர் மழையால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 வாரத்தில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 26 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 36 அடியும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 27 அடியும் உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் சாகுபடிக்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com