\
ஊழலை ஒழிக்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஊழலை ஒழிக்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஊழலை ஒழிக்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
Published on

ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். 

73வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து கொடுத்து வருகிறார். இதில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும். பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடியின் சிறப்பான தலைமையின்கீழ் புதிய இந்தியா உருவாகி வருகிறது” எனத் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com