ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம்: பண்ருட்டி ராமச்சந்திரன்

ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம்: பண்ருட்டி ராமச்சந்திரன்

ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம்: பண்ருட்டி ராமச்சந்திரன்
Published on

ஆட்சியைக் கவிழ்க்கும் ஒரே நோக்கத்திலேயே சட்டப்பேரவையில் திமுக செயல்பட்டதாக அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றம்சாட்டினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவையின் சட்டதிட்டங்களுக்குட்பட்டே சபாநாயகர் செயல்பட்டதாகக் கூறினார். ரகசிய வாக்கெடுப்பு கோருவது கட்சித் தாவல் தடை சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன், ஆட்சியைக் கவிழ்க்கும் ஒரே நோக்கத்துடனேயே திமுக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார். ஆட்சியைக் கலைத்து அடுத்து நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் திமுக உறுப்பினர்கள் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களே வெளியேற்றப்பட்டதாகவும் பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கமளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com