எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வார் பிரதமர்: ஓபிஎஸ் தகவல்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த வாரம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரிடம் அரசியல் பேசவில்லை எனவும், மக்களின் பிரச்னைகளை குறித்து பேசியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ் தலைமையில் அந்த அணியைச் சேர்ந்தவர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். இதன்பின் ஓபிஎஸ் அணி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அக்டோபரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் தேதியை தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்றும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த ஆவணங்கள் குறித்தும் பிரதமரிடம் விரிவாக விளக்கியதாகவும் பிரதமரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமியும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

