பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்: சசிகலா

பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்: சசிகலா
பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்: சசிகலா

அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் பன்னீர்செல்வம் நீக்கப்படுவார் என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.

‘என்னை கட்டாயப்படுத்தியதால் தான் ராஜினாமா செய்தேன்’ என முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். இதையடுத்து அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு அப்பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டு உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார். பின்னர் போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சசிகலா, பன்னீர்செல்வம் பின்னணியில் திமுக செயல்படுகிறது என குற்றும்சாட்டினார். மேலும், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்படுவார் என கூறினார்.

இது குறித்து கருதத் தெரிவித்த பன்னீர்செல்வம் அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com