தமிழ்நாடு
பதவி விலகல் கடிதத்தை அளிக்கப் போகிறேன்: பன்னீர்செல்வம்
பதவி விலகல் கடிதத்தை அளிக்கப் போகிறேன்: பன்னீர்செல்வம்
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சட்டமன்றக் குழுத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார் பின்னர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வழிமொழிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் அதனை வழிமொழிந்தனர். இதனையடுத்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் அளிக்கப் போவதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.