எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் ரெய்டு கண்டிக்கத்தக்கவை: அதிமுக அறிக்கை

எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் ரெய்டு கண்டிக்கத்தக்கவை: அதிமுக அறிக்கை

எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் ரெய்டு கண்டிக்கத்தக்கவை: அதிமுக அறிக்கை
Published on
'முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சந்திக்க கழகம் எப்பொழுதும் தயாராகவே உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார் ஓபிஸ் மற்றும் இபிஎஸ்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
''அதிமுக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறாடா, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலும் அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவதாக வரும் செய்திகள், மக்கள் நலப் பணிகளில் முழு கவனம் செலுத்தாமல் திமுக அரசு, அதிமுகவினரை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறதோ என்ற ஐயப்பாடும் வருத்தமும் மனதில் எழுகின்றன.
துடிப்பான கழகச் செயல்வீரர் வேலுமணி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்த நிலையில், இன்றைய சோதனைகள் கண்டிக்கத்தக்கவை என்றே கருதுகிறோம். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சந்திக்க கழகம் எப்பொழுதும் தயாராகவே உள்ளது.
ஆனால் ஆதாரம் ஏதுமின்றி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது. இத்தகைய சோதனைகள் அனைத்தையும் தாங்கி நின்று அதிமுக மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடும். அன்பு வழியிலும் அறவழியிலும் அரசியல் தொண்டாற்றும்.''
இவ்வாறு ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com