அண்ணாவை போல் அடக்கமானவர் பன்னீர்செல்வம்: பொன்னையன்
முதலமைச்சர் பன்னீர்செல்வம் அண்ணாவைப் போல் அடக்கமானவர் என பொன்னையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், ஓ.பன்னீர்செல்வத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்னையன், தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவரே அதிமுகவின் பொதுச்செயலாளராக வர முடியும் என்று தெரிவித்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது சசிகலாவை தவிர வேறு யாரும் சந்திக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் விருப்பத்திற்கேற்பவே செயல்பட வேண்டும். அண்ணாவை போன்று அடக்கத்தோடு பணியாற்றுபவர் பன்னீர்செல்வம். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செயல்படுபவர் பன்னீர்செல்வம்தான். சமூக வலைதளங்களில் பொது மக்கள் சொல்லும் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதிமுக தொண்டர்களின் ஆதரவு பன்னீர்செல்வத்திற்கு இருக்கிறது என பொன்னையன் கூறினார்.