போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. காலையில் இருந்து மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றனர்.
பன்னீர்செல்வம் 51,584 வாக்குகளும் தங்க தமிழ்ச்செல்வன் 49,844 வாக்குகளும் பெற்றுள்ளனர். 1740 வாக்குகள் வித்தியாசத்தில் பன்னீர்செல்வம் முன்னிலை பெற்று வருகின்றனர். இதனால் அங்கு தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.