முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் அவரது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, பொன்னையன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுடன் இணைந்து தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் திட்டம் குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்துப் பேசினார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின்போது, சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஆளுநரிடம் அவர்கள் விளக்கியதாகத் தெரிகிறது. ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரியதை சபாநாயகர் நிராகரித்து விட்டதை சுட்டிக்காட்டிய பன்னீர்செல்வம் தரப்பினர், நேற்றைய வாக்கெடுப்பை அங்கீகரிக்க வேண்டாம் என்று ஆளுநரை வலியுறுத்தியுள்ளனர்.