ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி பாலமுருகன் காலமானார்

ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி பாலமுருகன் காலமானார்

ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி பாலமுருகன் காலமானார்
Published on

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் பாலமுருகன்(61)  காலமானார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலைக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாலமுருகன், சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட சில இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி மதுரை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், அவரை சென்னைக்கு அழைத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போது, அப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளின்படி மத்திய பாதுகாப்புத்துறை
அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக ஒப்புதல் அளித்து, பாலமுருகன் ராணுவ ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிர் பிழைத்தார். தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், பாலமுருகன், இன்று அதிகாலை 4 மணிக்கு பெரியகுளம் தென்கரையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார், அவருக்கு லதா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com