தமிழ்நாடு
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் மரியாதை
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருடமான பன்னீர்செல்வமும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர். மேலும் அமைச்சர்கள், அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கருப்புச் சட்டை அணிந்து உறுதிமொழி ஏற்றனர்.

