கிராம மக்கள் எதிர்ப்பு - போலீஸ் பாதுகாப்புடன் வாக்களித்த ஊராட்சி மன்றத் தலைவர்

கிராம மக்கள் எதிர்ப்பு - போலீஸ் பாதுகாப்புடன் வாக்களித்த ஊராட்சி மன்றத் தலைவர்
கிராம மக்கள் எதிர்ப்பு - போலீஸ் பாதுகாப்புடன் வாக்களித்த ஊராட்சி மன்றத் தலைவர்

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள இந்துமதி பாண்டியன், பலத்த பாதுகாப்போடு, தனது வாக்கை பதிவுசெய்ய புறப்பட்டார்.

நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலினத்தவருக்காக ஒதுக்கப்பட்டதால் அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. எதிர்ப்பை மீறி இந்துமதி பாண்டியன் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். நாயக்கனேரியிலுள்ள 9 வார்டு, ஒன்றியக்குழு பதவிகளுக்கு ஒருவர்கூட போட்டியிடவில்லை. ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு இந்துமதி மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ததால் இவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக நாயக்கனேரி பஞ்சாயத்து மக்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே மாவட்டக்குழு உறுப்பினர் பதவிக்கு வாக்களிப்பதற்காக இந்துமதி பாண்டியன் புறப்பட்டார். அங்கு அசாதாரண சூழல் நிலவியதால் இந்துமதி பாண்டியனுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. காவல்துறையினர் புடைசூழ இந்துமதி பாண்டியன் வாக்களிக்க புறப்பட்டார். 9ஆவது வார்டில் 234ஆம் பூத்தில் அவர் வாக்கு செலுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com