\
சிதம்பரம் அருகே பட்டியலின ஊராட்சித் தலைவர் அவமதிப்பு... ஊராட்சி செயலர் கைது

சிதம்பரம் அருகே பட்டியலின ஊராட்சித் தலைவர் அவமதிப்பு... ஊராட்சி செயலர் கைது

சிதம்பரம் அருகே பட்டியலின ஊராட்சித் தலைவர் அவமதிப்பு... ஊராட்சி செயலர் கைது
Published on

கடலூர் மாவட்டம். சிதம்பரம் அருகே உள்ள தெற்குத்திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலர் சிந்துஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

புவனகிரி அருகேயுள்ள தெற்குதிட்டை ஊராட்சி மன்றத்தலைவராக ராஜேஷ்வரி என்பவரும் துணைத்தலைவராக மோகன் என்பவரும் உள்ளனர். ஊராட்சி மன்றக் கூட்டத்தின்போது , தலைவர் ராஜேஷ்வரி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை துணைத்தலைவர் மோகன் தரையில் அமர்த்தியதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியாகி பரபரப்பானது.

இந்த சம்பவம் தொடர்பாக புவனகிரி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்தது உண்மைதான் என்பது தெரியவந்தது. பின்னர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் மோகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட வழக்கில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் ஊராட்சி செயலர் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com