பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள்: கூண்டு வைத்து பிடித்த ஊராட்சி நிர்வாகம்

பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள்: கூண்டு வைத்து பிடித்த ஊராட்சி நிர்வாகம்
பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள்: கூண்டு வைத்து பிடித்த ஊராட்சி நிர்வாகம்

திருமயம் அருகே உள்ள செங்கீரையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 60க்கும் மேற்பட்ட குரங்குகளை ஊராட்சி நிர்வாகம் கூண்டு வைத்து பிடித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள செங்கீரை ஊராட்சியில் குரங்குகள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் குரங்குகள் நடமாட்டத்தால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் செய்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை ஒரு குரங்கு சாலையில் நடந்து சென்ற பெண்மணி கடித்துவிட்டது. இதனையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரிமளம் பசுமை மீட்பு குழுவினரிடம் கூண்டுகளை வாங்கி அதில் பழங்களை போட்டு வைத்தனர்.


அந்த பழங்களை சாப்பிட வந்த 60க்கும் மேற்பட்ட குரங்குகளை கூண்டுக்குள் அடைத்து பிடிக்கப்பட்டது. பின்பு இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் வனத்துறையினரின் அனுமதியுடன் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் காப்பு காட்டில் அனைத்து குரங்குகளும் விடப்பட்டது.

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com