நெல்லை: பணகுடி கன்னிமராதோப்பில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

நெல்லை: பணகுடி கன்னிமராதோப்பில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
நெல்லை: பணகுடி கன்னிமராதோப்பில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

பணகுடி கன்னிமராதோப்பில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு சுற்றுலாப்பயணிகள் குவிந்துவருகின்றனர். 

நெல்லை மாவட்டம் பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் மழைபெய்து வருவதால் கன்னிமராதோப்பு ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாவட்டத்தில் பல இடங்களில் சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை, வள்ளியூர், ராதாபுரம் பணகுடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் என 500 க்கும் மேற்பட்டோர் கன்னிமராதோப்பு ஓடையில் குவிந்துள்ளனர்.

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய தடுப்பணையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com