பிரதமர் மோடி
பிரதமர் மோடிpt desk

பாம்பன் ரயில் பாலம் | ஏப்ரல் 6 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் - ரயில்வே பொது மேலாளர் தகவல்

பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
Published on

செய்தியாளர்: அ.ஆனந்தன்

பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் மற்றும் ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் ரயில் நிலைய கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் பிரதமர் வருகையை ஒட்டி திறப்பு விழாவிற்கான ஏற்பாடு குறித்து ஒத்திகை நடத்துவதற்காக சிறப்பு ஆய்வு ரயில் மூலம் ராமேஸ்வரம் வந்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்என்சிங் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார்.

புதிய பாம்பன் பாலம்
புதிய பாம்பன் பாலம்pt web

இதைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர்... வரும் ஏப்ரல் 6 ஆம்; தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை... ஆதிக்கம் செலுத்தும் பாஜக? ஆய்வு சொல்லும் தகவல்!

பாம்பன் கடலில் உள்ள பழைய ரயில் தூக்கு பாலம் மோசமான நிலையில் இருப்பதால் பாலத்தை அகற்றுவதில் சிரமம் இருப்பதால் அதனை அகற்றுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையேயான ரயில் சேவை பணிகள் குறித்து நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் மாநில அரசுடன் பேசி விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com