ராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதன் காரணமாக, பாலத்தின் பாதி வழியிலேயே ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வந்த சேது விரைவு ரயில் சுமார் இரண்டு மணி நேரம் வரை பாம்பன் அருகே எந்த அறிவிப்புமின்றி பாதி வழியில் ரயில் நிறுத்தப்பட்டதால் ரயிலில் பயணித்த குழந்தைகள், முதியவர்கள் அச்சம் அடைந்ததாக தெரிவித்தனர். பின்னர் காற்றின் வேகம் குறைந்ததையடுத்து, மிகக் குறைந்த வேகத்தில் ரயில், பாலத்தைக் கடந்து சென்றது. சூறைக்காற்று வீசியதால் மரங்கள் முறிந்ததோடு, தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள் சேதமடைந்தன.

