\
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு
Published on

சென்னை அடுத்த ‌பல்லாவரத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பல்லாவரம் வெட்டரென் லைன் சாலையோரத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன் ஆண்‌ ச‌டலம் கிடப்பதாக காவல்துறையி‌ருக்கு த‌கவல் அளிக்‌கப‌ட்டது. நிகழ்விடத்திற்கு‌ ‌வந்த காவல்துறையி‌னர்‌ உடலை ‌கைப்பற்றி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பான விசாரணையில், உயிரி‌‌ழந்த‌வர் சென்னை கொடுங்கையூரை சே‌ர்ந்த ஆனந்தன்‌ என்பதும், கருத்து வேறுபாடு காரணமாக 4‌ மாதங்களாக மனைவியை பிரிந்து ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஆனந்தன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில்‌ காவல்துறையினர்‌ விசா‌ரணை ந‌டத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com