vellore bjp couple cheating case
vellore bjp couple cheating casePT

வேலூர் | மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கல்லா கட்டிய பாஜக நிர்வாகி.. மனைவி உடன் மாயம்!

போலி பணி நியமன ஆணையை கொடுத்து பலரை ஏமாற்றியது அம்பலம். தலைமறைவான பாஜகவை சேர்ந்த தம்பதியை காவல்துறை தேடி வருகிறது.
Published on

மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களை குறி வைத்து 50 லட்சம் வரை மோசடி செய்த பாஜகவைச் சேர்ந்த நிர்வாகி மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு.

வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்தவர் லோகேஷ்குமார்(32), இவர் முதுகலை பட்டதாரி இளைஞர் ஆவார், விளையாட்டில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் சிறுவயது முதலே பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி பெற்றுள்ளார்,

மேலும் ஆன்லைனில் தேடிப்பார்த்த போது பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் 'யங் ஸ்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா' என்ற பெயரில் இருந்த நிறுவனத்தை நம்பி நேரில் சென்று பார்த்துள்ளார், அங்கு ஜெயராம் மற்றும் பிரியா ஆகியோர் இருந்துள்ளனர்.

அங்கு பணம் கட்டி சிலம்பம் கற்றுக் கொண்டு அதன் மூலம் மத்திய மாநில அரசுகளில் அரசுப் பணிக்கு சேரலாம் என்ற ஆசையில் சான்றிதழ் பெற்றுள்ளார்.

ஜெயராம் தான் பாஜகவில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவில் மாவட்ட துணை தலைவராக இருப்பதாகவும், தனக்கு பாஜகவில் டெல்லி வரை முக்கிய பிரமுகர்களை தெரியும் என்பதால் அதன் மூலம் மத்திய அரசில் விளையாட்டை வைத்து பணி நியமனம் வாங்கித் தர முடியும் என கூறி அதனை நம்பும் படி அமைச்சரிடம் பேசுவது போல் செல்போனில் பேசி நாடகமாடியுள்ளார்.

அதற்கு கொஞ்சம் பணம் செலவு செய்தால் மத்திய அரசில் ரயில்வே, தேசிய புலனாய்வு பிரிவு, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட துறைகளில் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீடு மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 17 லட்சம் ரூபாய் வரை பல்வேறு தவணைகளாக ஜெயராம் அவரது மனைவி அஸ்வினி ஜெயராம் இவரும் பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் கல்வியாளர் பிரிவு, இவரது வங்கிக் கணக்கிலும், சத்தியா சக்ரவர்த்தி ஆகியோர் கணக்கிலும் இந்த பணத்தை பெற்றுள்ளனர்.

இதற்காக மத்திய அரசு பணியில் சேர பணி நியமன ஆணையையும் வழங்கியுள்ளார் இதனை ஆய்வு செய்த போது தான் இது போலியான நியமன ஆணை என்பது தெரியவந்தது.

தான் ஏமாற்றப்பட்டது போல் விசாரித்த போது தான், பலரிடம் இதே போல் மத்திய அரசில் பணி வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரிந்து, லோகேஷ்குமார் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையரக புகார், சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு பாஜக பிரமுகர்களான ஜெயராம், அஸ்வினி ஜெயராம், அவரது அம்மா சத்தியா, ஸ்போட்ஸ் நிறுவனத்தில் பணியில் இருந்த பிரியா உள்ளிட்டோர் மீது 316(2), 318(4), உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாஜக தம்பதி உட்பட மோசடியில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com