பல்லடம்: கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு

பல்லடம்: கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு

பல்லடம்: கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு
Published on

பல்லடம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து ராஜேந்திரன் என்பவர் தனது உறவினர்கள் ஜெயந்தி, சுலோச்சனா ,சுசீலா, கமலா ஆகியோருடன் காரில் பல்லடத்திற்கு வந்து கொண்டிருந்தார். திருப்பூரில் இருந்து ரமேஷ் என்பவர் தனது 12 வயது மகன் கோகுலுடன் உடுமலைபேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருவரும் பல்லடம் அருகே புள்ளியப்பம்பாளையம் அருகே வந்தபோது கார்கள் நேர் நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுசீலா, கமலா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தினை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ஜெயந்தி, சுலோச்சனா ஆகிய இருவரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவன் கோகுல், ரமேஷ், ராஜேந்திரன் ஆகிய மூவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com