மீண்டும் அதே களம்: எடப்பாடியில் ஈபிஎஸ்; போடியில் ஓபிஎஸ் போட்டி!

மீண்டும் அதே களம்: எடப்பாடியில் ஈபிஎஸ்; போடியில் ஓபிஎஸ் போட்டி!

மீண்டும் அதே களம்: எடப்பாடியில் ஈபிஎஸ்; போடியில் ஓபிஎஸ் போட்டி!
Published on

எடப்பாடியில் முதலமைச்சர் பழனிசாமியும், போடிநாயக்கனூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் போட்டியிட உள்ளனர். இன்று விருப்பமனு அளிக்க உள்ளனர்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, சென்னை - ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைக்கின்றனர்.

அதன்படி, எடப்பாடியில் முதலமைச்சர் பழனிசாமியும், போடிநாயக்கனூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் போட்டியிட உள்ளனர். அதற்கான விருப்பமனுவை அவர்கள் இன்று அளிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com