பழனி கோயிலுக்கு வந்த சிறுவன், சிறுமி - மிரட்டிக் கடத்திய செக்யூரிட்டி

பழனி கோயிலுக்கு வந்த சிறுவன், சிறுமி - மிரட்டிக் கடத்திய செக்யூரிட்டி

பழனி கோயிலுக்கு வந்த சிறுவன், சிறுமி - மிரட்டிக் கடத்திய செக்யூரிட்டி
Published on

பழனி கோவிலுக்கு வந்த 16 வயது சிறுமியை கோவில் செக்யூரிட்டி மிரட்டி கடத்தியதாக சிறுமியுடன் வந்த சிறுவன் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள பூலாம்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் மூலனூரை சேர்ந்த 16 வயது சிறுமியும் ஒன்றாக சேர்ந்து பழனி கோயிலுக்கு வந்துள்ளனர். பழனி கிரிவீதியில் இருவரும் நடந்து சென்ற போது, இடும்பன்மலை அடிவாரத்தில் பணியில் இருந்த கோயில் தனியார் பாதுகாவலர் பூவழகன் என்பவர் இருவரையும் நிறுத்தி விசாரித்துள்ளார். அத்துடன் எங்கே செல்கிறீர்கள் ? என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறுவனை பாதுகாவலர்கள் தங்கும் அறையில் வைத்து பூட்டிவிட்டு, சிறுமியை அங்குவந்த வேறு சிலருடன் அனுப்பிவைத்துள்ளார். 

இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அடைத்துவைக்கப்பட்ட சிறுவனை அடிவாரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தகவலறிந்த பழனி அடிவாரம் காவல் துறையினர் உடனடியாக பாதுகாவலர் பூவழகனை பிடித்து விசாரித்தனர். இதில் கொடைக்கானல் சாலையை சேர்ந்த மனோஜ் மற்றும் சோழவந்தான் என்ற இருவருடன் அனுப்பிவைத்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில், சிறுமியை பழனி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டதாக தெரிவித்தனர். 

பின்னர் போலீசார் சிறுமியை தேடி மீட்டனர். மேலும் சிறுவன் மற்றும் சிறுமியை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கோயிலுக்கு வந்தவர்களை மிரட்டி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திய பாதுகாவலர், மற்றும் சிறுமியை அழைத்துச்சென்ற இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com