நாசா காலண்டரில் இடம்பெற்ற ஓவியங்கள்... பழனி மாணவிகள் செய்த சாதனை!

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள 2024 ம் ஆண்டு காலண்டரில் பழனி மாணவிகள் வரைந்த ஓவியம் இடம்பெற்றுள்ளன. உலகளவில் நடந்த போட்டியில் தமிழ்நாட்டு மாணவிகளின் ஓவியம் தேர்வாகியுள்ளது.
வெற்றிபெற்ற மாணவர்களுடன் ஆசிரியர்கள்
வெற்றிபெற்ற மாணவர்களுடன் ஆசிரியர்கள்PT

செய்தியாளர் - அஜ்மீர் ராஜா

-----------

திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே புஷ்பத்தூரில் ஸ்ரீ வித்யா மந்திர் என்ற தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கும் துகிலோவியா, 4-ம் வகுப்பு படிக்கும் லயாஷினி, 7ம் வகுப்பு படிக்கும் மாணவி தித்திகா ஆகியோர் வரைந்த ஓவியங்கள், 2024ம் ஆண்டின் நாசா விண்வெளி காலண்டரில் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளது.

சாதனை மாணவிகள்
சாதனை மாணவிகள்PT

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டிற்கும் காலண்டர் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்படும் காலண்டரில் இடம்பெறும் பன்னிரெண்டு பக்கங்களுக்கும் ஒவ்வொரு தலைப்புகள் கொடுக்கப்பட்டு, உலகளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்வாகும் படங்களை காலண்டரின் 12மாதங்களுக்கான பக்கங்களில் பிரசுரிப்பது வழக்கம்.

2024ம் ஆண்டு காலண்டருக்கான போட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் உலகளவில் 194 நாடுகளில் இருந்து நான்கு வயது முதல் பன்னிரெண்டு வயதிற்குட்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் பழனி அருகே உள்ள தனியார் பள்ளியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

அவர்களில் 1ம் வகுப்பு படிக்கும் துகிலோவியா, 4வகுப்பு படிக்கும் லயாஷினி, 7ம் வகுப்பு படிக்கும் மாணவி தித்திகா ஆகியோர் சூரிய குடும்பம், ராக்கெட் மற்றும் விண்வெளி கிராஃப்ட், விண்வெளியில் வீரர் ஆகிய தலைப்புகளில் வரைந்த ஓவியங்கள் நாசா வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டிற்கான காலண்டரின் அட்டைப்படத்தில் இடம் பெற தேர்வாகியுள்ளன.

PT

மேலும் இந்த ஓவியம் அச்சிடப்பட்ட காலண்டர்கள் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வைக்கப்பட உள்ளன. உலகளவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவில் இருந்து 25,000 மாணவ மாணவிகள் பங்கேற்றதில் தமிழகத்தை சேர்ந்த மூன்று மாணவிகளின் ஓவியம் தேர்வாகி சாதனை படைத்துள்ளது.

தேர்வான ஓவியங்கள்
தேர்வான ஓவியங்கள்PT

தொடர்ந்து 5 வது முறையாக பழனி ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் ஓவியங்கள் நாசா விண்வெளி காலண்டரில் இடம்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது‌. ஓவியம் வரைந்து சாதனை படைத்த மாணவிகளுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com