\
ஆம்ஸ்ட்ராங் - இயக்குநர் பா.ரஞ்சித்
ஆம்ஸ்ட்ராங் - இயக்குநர் பா.ரஞ்சித்முகநூல்

ஆம்ஸ்ட்ராங்குடன் இருந்தவர்களே கொலைக்கு உறுதுணையாக இருந்திருப்பது அதிர்ச்சி - பா.ரஞ்சித்

ஆம்ஸ்ட்ராங்குடன் இருந்த நபர்களே அவரது கொலைக்கு உறுதுணையாக இருந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக, இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
Published on

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டும், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் தண்டனை வாங்கி தரக்கோரியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியுமான திருமதி ஆம்ஸ்ட்ராங், திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் பங்கேற்றனர்.

Armstrong murder case
Armstrong murder casept desk
ஆம்ஸ்ட்ராங் - இயக்குநர் பா.ரஞ்சித்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு ரவுடி வேலூர் மத்திய சிறையில் வைத்து கைது

மேடையில் பேசிய பா.ரஞ்சித், மக்கள் கேள்வி எழுப்பியதால் தமிழ்நாடு அரசு பயந்து போய், விசாரணையை முடுக்கிவிட்டதாக குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஆனந்தன், இன்னும் சில தினங்களில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை நிறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com