\
அதிமுகவின் மகளிரணி செயலாளராக பா. வளர்மதி நியமனம்

அதிமுகவின் மகளிரணி செயலாளராக பா. வளர்மதி நியமனம்

அதிமுகவின் மகளிரணி செயலாளராக பா. வளர்மதி நியமனம்
Published on

அதிமுகவின் மகளிரணி செயலாளராக பா. வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாலர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கழக இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பா. வளர்மதியும், கழக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வைகைச்செல்வனும் அப்பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகளாகவும், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகவும் நியமிக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

அதன்படி, அதிமுகவின் மகளிரணி செயலாளராக பா. வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார். வைகைச்செலவன் கழக இலக்கிய அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com