ப.ஜீவானந்தத்தின் 113 ஆவது பிறந்தநாள் - குமரி ஆட்சியர் மரியாதை
குமரி ஆட்சியர் மரியாதைபொதுவுடமை சிற்பி என போற்றப்படும் ஜீவானந்தத்தின் 113 - வது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் பூதபாண்டியில் பிறந்த ஜீவானந்தம் இளமையிலேயே கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தன்னை அந்த இயக்கத்தில் அர்ப்பணித்து பொது வாழ்வில் ஈடுபட்டார். 1932 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றார். 40 ஆண்டுகள் பொது வாழ்வில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார்.
நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு தொழிலாளர்கள் ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அவர், சென்னை வண்ணாரபேட்டை தொகுதியில் நின்று போட்டியிட்டு 1952 ல் சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு செய்யபட்டார். பொதுவுடமை சிற்பி என்று அழைக்கப்பட்ட அவரின் 113 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி நாகர்கோவிலில் அவரது மணி மண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக அரசின் சிறப்பு டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.