\
ஒரு சொட்டு கண்ணீரில்லை

ஒரு சொட்டு கண்ணீரில்லை

ஒரு சொட்டு கண்ணீரில்லை
Published on

முதலமைச்சர் ஜெயலலிதா கவலைக்கிடமாக இருப்பதாக சொன்னபோது சசிகலா மற்றும் அமைச்சர்களிடம் ஒருசொட்டுக் கண்ணீரில்லை என்று அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஹெச்.பாண்டியன், முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22ம் தேதி நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரைப் பார்க்க ங்களுக்கு அனுமதி தரப்படவில்லை என்று குற்றம் சாட்டிய பிஹெச்.பாண்டியன், அவரைப் பார்க்க சென்றபோது மெய்க்காப்பாளர்கள் தான் முதலமைச்சர் நலமாக இருக்கிறார், அவர் உணவு எடுத்துக் கொள்கிறார் என்று ஒரே வார்த்தைகளைத் திரும்பத் திரும்பக் கூறினர் என்றும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com