'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி

'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி

'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி
Published on

'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' என்ற கேள்விக்கு என்ன பதில்? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வினவியுள்ளார்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம் தனது ட்விட்டரில், “'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' என்ற கேள்விக்கு என்ன பதில்? 

இலங்கைத் தமிழர்கள் என்றல்லவா அவர்களைப் பார்க்க வேண்டும்?

அவர்களில் பெரும்பான்மையானவர் இந்துக்கள் என்பதை அரசு மறந்துவிட்டதா?” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை ஆதரித்ததற்கு அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் கூறியுள்ள காரணம் கவலைக்குரியது, கேலிக்குரியது.

தலமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளரின் உத்தரவுக்கு ஏற்ப வாக்களித்தோம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தலைக்குனிவு” என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com