P Chidambrampt desk
தமிழ்நாடு
“புதிய தண்டனை சட்டம் தனிமனித சுதந்திரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்” - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
புதிய தண்டனை சட்டம் தனிமனித சுதந்திரத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களும் மிகவும் அபாயகரமானது. ஏழை, உழைக்கும் வர்க்கம் மற்றும் நலிந்த பிரிவினரை ஒடுக்கும் கருவியாக புதிய தண்டனை சட்டம் மாறும்.
new penal codefile
இச்சட்டத்தில் சரியான செயல் முறையை வலுப்படுத்துவதற்கு பதிலாக சுதந்திரம் மற்றும் தனிச் சுதந்திரம் ஆகியவற்றை கடுமையாகக் கட்டுப்படுத்தும் பல விதிகள் உள்ளன. கைது மற்றும் போலீஸ் காவலில் காவல்துறையினரின் அத்துமீறலுக்கு வழி வகுக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, 2024 ஆம் ஆண்டு அமைய உள்ள புதிய அரசு இச்சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.