குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் - ப.சிதம்பரம்

குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் - ப.சிதம்பரம்

குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் - ப.சிதம்பரம்
Published on

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் திருமயம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான ரகுபதியின் வீட்டிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று வருகை தந்தார். அப்போது அவர்  திமுக எம்எல்ஏ ரகுபதி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்‌‌. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “குடியுரிமை மசோதா என்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது. மத்திய அரசு குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வரவேண்டும். எல்லா நாடுகளிலும் அகதிகள் சட்டம் இருக்கிறது. அகதிகளாக யார் விண்ணப்பிக்கலாம்? அதில் யார் தகுதியானவர்கள்? யாரை அகதியாக ஒரு நாடு ஏற்றுக்கொள்ளும்? எவ்வித நிபந்தனைகளோடு ஒரு நாடு அகதிகளை ஏற்றுக் கொள்ளலாம்? எனப் பல விதிகள் பல மரபுகள் இருக்கின்றன. 

அதை எல்லாம் ஆராய்ந்து பார்த்து நமது தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து அகதிகள் சட்டத்தை கொண்டு வருவதற்கு பதிலாக சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தி ஒரு மதத்தினருக்கும் மற்றோர் மதத்தினருக்கும் இடையே பாகுபாடு செய்யக்கூடிய வகையில் குடியுரிமை சட்டம் என்ற தவறான சட்டத்தை இந்த அரசு கொண்டு வருகின்றது. 

ஏறத்தாழ ஆயிரத்து 600 கோடி ரூபாய் அசாமில் தேசிய குடிமக்கள் பட்டியல் தயாரிக்கிறேன் என்று அந்த அரசு செலவு செய்து. அதனை அசாம் அரசு நிராகரித்துவிட்டது. அந்த ஆயிரத்து 600 கோடி ரூபாய் வீணானது. அப்போது நாங்கள் சொல்லியும் கேட்கவில்லை, முரட்டு பெரும்பான்மையை வைத்து இந்தச் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி விடலாம் என்று நினைத்தால் அது தவறு. அதற்கான விளைவுகள் மிக மோசமாக இருக்கும். இதை ஒதுக்கி வைத்துவிட்டு அனைத்து அரசியல் கட்சிகளையும் அறிஞர்களையும் வைத்து கலந்தாலோசித்து ஆராய்ந்து ஒரு முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வருவது விவேகமானது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com