விஜய்  ப.சிதம்பரம்
விஜய் ப.சிதம்பரம்pt desk

‘பாசிசமா... பாயாசமா...’ - விஜய்யின் பேச்சு சினிமா வசனம் போல் உள்ளது – ப.சிதம்பரம் விமர்சனம்

"பாசிசமா பாயாசமா என்ற விஜய் பேச்சு சினிமா வசனம் போல் இருக்கிறது. சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
Published on

செய்தியாளர்: சகாய மெர்சி பாய்

சென்னை தி.நகரில் திருமதி சௌந்திரா கைலாசம் இலக்கிய பரிசு பெற்ற "பஞ்சவர்ணம்" நாவல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் பேசுகையில்....

“விஜய் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார். அவருக்கு என்னுடைய நல்வாழ்த்துகள். புதிய கட்சியின் கோட்பாடாக ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று சொல்லி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியினுடைய சில கொள்கைகளை வலியுறுத்தி பேசி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அதில் சில வாசகங்கள் மகிழ்ச்சி தரவில்லை.

விஜய்  ப.சிதம்பரம்
“சங்கர் படம் போல் பிரம்மாண்டமாக இருந்தது தவெக மாநாடு” – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது சாத்தியமா, சாத்தியம் இல்லையா என்பதை தேர்தல்தான் முடிவு செய்யும். இப்பொழுது எப்படி சொல்ல முடியும்? இன்று சாத்தியமில்லாதது எல்லாம் ஒரு காலத்தில் சாத்தியமாகலாம். பாசிசமா பாயாசமா என்று பேசியிருக்கிறார். இது சினிமா வசனம் போல் இருக்கிறது. சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com