\
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்

"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்

"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்
Published on

பாஜக ஆட்சியில் சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுவதாகவும், சுதந்திர எண்ணங்கள் முடக்கப்படுவதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் பெற்ற ப.சிதம்பரம், தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மலர் மாலைகள் மட்டுமின்றி பழ மாலைகளும், சால்வைகளும் அணிவித்து வரவேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், பாஜக ஆட்சியில் இருக்கும் வரை நாட்டின் பொருளாதாரம் மீளாது என்று கூறினார். உன்னாவ் பாலியல் வன்கொடுமையை சுட்டிக்காட்டிய அவர், உத்தரப்பிரதேச மாநிலம் கொலைக்களமாக மாறிவருவதாக விமர்சனம் செய்தார். மேலும், தனது மனஉறுதியைக் குலைப்பதற்காகவே தான் சிறையில் அடைக்கப்பட்டதாக ப.சிதம்பரம் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com