“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்”

“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்”

“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்”
Published on

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடியும் தனி விமானத்தில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்.

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அவசர வழக்கை நேற்றிரவு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம், மெரினாவில் அவர் உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை ஒதுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அண்ணா சமாதி அருகே கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான ஆயத்த வேலைகள் அங்கு நடந்துகொண்டிருக்கிறது. 

இந்நிலையில் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது என்று திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கம் சென்றடையும். தொண்டர்களும் பொதுமக்களும் அமைதி காத்திட வேண்டும் என்று திமுக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்காக தயாராகியுள்ள சந்தனப் பேழையின் படம் வெளியாகியுள்ளது. அந்த சந்தன பேழையில், “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஸ்டாலின் தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவுக்கான நேற்று எழுதியிருந்த இரங்கற்பா கவிதையில் இந்த தகவலையும் குறிப்பிட்டு இருந்தார். 

ஸ்டாலின் தனது கவிதையில், 
“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ
ஓய்வு கொண்டிருக்கிறான்” என்று உங்கள்
நினைவிடத்தில் எழுத வேண்டுமென்று 
33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள்.
இந்தத் தமிழ் சமூகத்துக்காக
இடையறாது உழைத்தது போதும் என்ற மனநிறைவுடன்
புறப்பட்டுவிட்டீர்களா?” என்று கூறியிருந்தார்.

முன்னதாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவிடத்தில், “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது” என்ற வாசகம் பொறிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com