தீயணைக்கும் செலவை சென்னை சில்க்ஸ்தான் ஏற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

தீயணைக்கும் செலவை சென்னை சில்க்ஸ்தான் ஏற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
தீயணைக்கும் செலவை சென்னை சில்க்ஸ்தான் ஏற்க வேண்டும்:  அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை சில்க்ஸ் தீ விபத்து குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், கட்டட உரிமையாளர்கள் அலட்சியத்தால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீயணைப்பு பணிக்கான செலவு முழுவதையும் கட்டட உரிமையாளர்களே ஏற்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் காலை சுமார் 4.30 மணியளவில் தீப்பிடித்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 11 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். இந்தநிலையில், தீயணைக்கும் பணியை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், தீயணைக்கும் பணியில் 2 ஸ்கை லிப்டுகள், 150க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், காவல் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து போர்க்கால நடவடிக்கையில் தீயை அணைக்கப் போராடி வருவதாவும் அவர் கூறினார். 

தீ விபத்தால் கட்டடத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள். ஆய்வில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தால் கட்டடம் இடிக்கப்படும் என்று கூறிய அவர், கட்டடம் கட்டப்பட்டதில் விதிமுறைகள் மீறியிருப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கட்டட உரிமையாளர்களின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், தீயணைக்கும் பணிக்கான முழு செலவினையும் கட்டட உரிமையாளர்கள்தான் ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com