\
நிரம்பிவரும் செம்பரம்பாக்கம் ஏரி - ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் இளைஞர்கள்

நிரம்பிவரும் செம்பரம்பாக்கம் ஏரி - ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் இளைஞர்கள்

நிரம்பிவரும் செம்பரம்பாக்கம் ஏரி - ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் இளைஞர்கள்
Published on

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வரும் நிலையில், அங்கு செல்பி எடுக்க வரும் மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’புயலின் காரணமாக, சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏரியைக் காண அப்பகுதி சுற்றுவட்டார மக்கள் அங்கு படையெடுத்து வருகின்றனர். முன்னதாக ஏரிக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க, போலீசார் குவிக்கப்பட்டிருந்த போதும் கூட, மாற்று வழியில் ஏரிமதகு அருகே வரும் மக்கள் செல்பி எடுத்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் 4 மணி நிலவரம் :

மொத்தக்கொள்ளளவு - 24 அடி : தற்போதைய நிலை - 21.24 அடி

மொத்த கொள்ளளவு - 3645 மில்லியன் கன அடி

தற்போதைய நிலை - 2918 மில்லியன் கன அடி

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com