அதிவேகமாக வந்த கார்மோதி தொழிலாளி மரணம் - திருமண மாப்பிள்ளை கைது

அதிவேகமாக வந்த கார்மோதி தொழிலாளி மரணம் - திருமண மாப்பிள்ளை கைது

அதிவேகமாக வந்த கார்மோதி தொழிலாளி மரணம் - திருமண மாப்பிள்ளை கைது
Published on

மதுரையில் கார் மோதி துப்புரவு தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

மதுரை கோமதிபுரம் பகுதியில் துப்புரவு தொழிலாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று தொழிலாளர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தமிழரசன் என்ற துப்புரவு தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மேலும் 3 துப்புரவு தொழிலாளர்கள் மதுரை அரசு மருத்துவ‌மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரை அங்கிருந்தவர்கள் பிடித்தனர். அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியவர், மதுரை மேலமடையை சேர்ந்த ஜெகன் நாதன் என்பதும் அவருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்ததும் தெரியவந்தது. ஜெகன்நாதன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நடைபெற இருந்த திருமணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com