கஜா புயலால் சிதைந்துபோன சிறுதலைக்காடு கிராமம் !

கஜா புயலால் சிதைந்துபோன சிறுதலைக்காடு கிராமம் !
கஜா புயலால் சிதைந்துபோன சிறுதலைக்காடு கிராமம் !

கஜா புயலால் நாகை மாவட்டத்தில் உள்ள சிறுதலைக்காடு மீனவ கிராமம் சிதைந்து போயுள்ளது. வங்கக் கடலோரம் கண்ணீர் கடலில் மிதக்கிறது சிறுதலைக்காடு.

சரிந்து கிடக்கும் செல்போன் டவர்கள், இறந்து கிடக்கும் ஆடு மாடுகள், சிதைந்து போன வீடுகள், உடைந்து போன படகுகள், மாற்றுத் துணியின்றி சாலைகளில் வசிக்கும் மக்கள், சேதமடைந்த பாடப்புத்தகங்கள் என சிறுதலைக்காடே சிதைந்து போய் கிடக்கிறது. 


 
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தைச் சேர்ந்த மீனவ கிராமம் சிறுதலைக்காடு. வேதாரண்யம் பகுதியில் வசிக்கும் சிலருக்கே சிறுதலைக்காடு எங்கு இருக்கிறது என்று கேட்டால் சற்று தடுமாறிப்போவார்கள். இரண்டு கிராமங்களைத் தாண்டி கடலை நோக்கிச் சென்றால் கடைசியாக இருக்கிறது சிறுதலைக்காடு. முத்துப்பேட்டை முகத்துவாரத்தில் இருக்கும் சிறுதலைக்காட்டின் முக்கியத் தொழில் மீன்பிடிப்பு. கடலை நம்பி 500 குடும்பங்கள் சிறுதலைக்காட்டில் வசித்து வருகின்றன. அவர்களின் ஒரே தொழில் மீன்பிடி, கால்நடைகள் வளர்ப்பு. சற்று வளர்ந்த கிராமங்களே கஜாவுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் சிறுதலைக்காடு போன்ற குக்கிராமங்கள் சிதைந்துபோய்விட்டன. 

மீன்பிடித் தொழிலுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் படகை கஜா புயல் கபளீகரம் செய்துவிட்டது. கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் சூறைக்காற்றில் துக்கி வீசப்பட்டு ஆங்காங்கே சேதமடைந்து கிடக்கின்றன. 400-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதி இடிந்த நிலையில் வானத்தையே கூரையாய் கொண்டு காட்சியளிக்கின்றன. புயலுக்கு முன்பு வரை எந்த சாலையில் நடந்து சென்றார்களோ அதே சாலையில் வசிக்கும் நிலைக்கு சிறுதலைக்காடு மக்களை தள்ளியிருக்கிறது கஜா. குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் மணல் கலந்த கடல் நீரை வடிகட்டி குடிக்கின்றனர் அக்கிராம மக்கள்.

முக்கிய சாலைகளின் இணைப்புகளில் உள்ள கிராமங்களுக்கே இன்னும் சரியான நிவாரண பொருட்கள் சென்று சேராத நிலையில் சிறுதலைக்காடு போன்ற குக்கிராமங்கள் இன்னும் யார் கண்ணிலும் படாமலே இருக்கின்றன. டெல்டாவின் தற்போதைய தேவை அடிப்படை தேவைகளுக்கான பொருட்கள். உதவுங்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com