பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 205 பேரை தேடும் சுகாதாரத்துறை!

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 205 பேரை தேடும் சுகாதாரத்துறை!
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 205 பேரை தேடும் சுகாதாரத்துறை!

உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த 205 பேர் இதுவரை கண்டறியப்படவில்லை. செல்போன் சிக்னல் மூலம் இவர்களை தேடுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி அந்நாட்டுடனான விமானப் போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் அதற்கு முன்பு பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தொடங்கியது. விமானங்கள் மூலம் நேரடியாக பிரிட்டனிலிருந்தோ அல்லது வேறு மாநிலங்களிலிருந்தோ வந்தவர்களின் e pass விவரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறையிடம் பகிரப்பட்டது. இதில் 1872 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் பரிசோதனை எடுக்கப்பட்டது. 24 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒருவருக்கு உருமாறிய கொரோனா இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இந்தச் சூழலில் பிரிட்டனில் இருந்து வந்த 205 பேரை இன்னும் கண்டறியவில்லை.

பிரிட்டனில் இருந்து நேரடியாக தமிழகம் வராமல் டெல்லி, ஹைதராபாத் , பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விமானம் மூலமாகவோ , ரயில் அல்லது கார் உள்ளிட்ட தரைவழிப்பயணமோ பலர் வந்திருப்பதால் அவர்களை கண்டறிவது சவாலாக உள்ளதென சுகாதாரத் துறை கூறுகிறது. சிலர் பாஸ்போர்ட்டிலும் பெற்றோர் வீட்டின் முகவரி, உறவினர் முகவரி, வாடகைக்கு குடியிருந்த முகவரி ஆகியவற்றை கொடுத்திருப்பதாலும், முகவரியை Update செய்யாமல் வைத்திருப்பதாலும் கண்டறிவதில் இழுபறி நீடிக்கிறது. எனவே E pass ல் கொடுக்கப்பட்டுள்ளா தொலைபேசி எண்களின் சிக்னல்கள் எந்த பகுதியில் செயல்பட்டு வருகின்றன என்பதை ஆய்வு செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் 104 உதவி எண் மூலமாக தாமாகவே முன் வந்து கொரோனா சோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே சுகாதார துறையின் அறிவுறுத்தலாக இருக்கிறது.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/S_XG0AF-ZJQ" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com