ஆவடி: ஊரடங்கு காரணமாக உணவில்லாமல் தவிக்கும் நரிக்குறவர் மக்கள்

ஆவடி: ஊரடங்கு காரணமாக உணவில்லாமல் தவிக்கும் நரிக்குறவர் மக்கள்
ஆவடி: ஊரடங்கு காரணமாக உணவில்லாமல் தவிக்கும் நரிக்குறவர் மக்கள்

ஆவடி அருகே ஊரடங்கு காரணமாக 200-க்கும் அதிகமான நரிக்குறவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உணவுக்கு கூட வழி இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 234 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ் உறுதி செய்தார். இதனால் முன்பை விட ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆவடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் ஐம்பதுக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசித்து வருகிறார்கள். ஊசி மணி கோர்த்து விற்பனை செய்வது, பலூன், பொம்மைகள் விற்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்த இவர்கள், ஊரடங்கு உத்தரவால் தற்போது உணவுக்கே வழி இல்லாமல் தவித்து வருகின்றனர். இது மட்டுமல்லமால் அவர்கள் வசித்து வரும் பகுதிகளில், சுகாதாரப் பணிகளும், கிருமி நாசினி தெளிப்பும்  செயல்படுத்தப்பட வில்லை எனவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது உடனடியாக அனைவருக்கும் உணவு வழங்கிட ஏற்பாடு செய்வதாகவும், சுகாதாரப் பணிகளை தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com