‘கஜா’ புயலின் வெளிப்பாகம் கரையை தொட துவங்கியது - வானிலை ஆய்வு மையம்

‘கஜா’ புயலின் வெளிப்பாகம் கரையை தொட துவங்கியது - வானிலை ஆய்வு மையம்

‘கஜா’ புயலின் வெளிப்பாகம் கரையை தொட துவங்கியது - வானிலை ஆய்வு மையம்
Published on

‘கஜா’ புயலின் வெளிப்பாகம் கரையை தொட ஆரம்பித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘கஜா’ புயல், கடலூர்- பாம்பன் இடையே  இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் தாக்கத்தினால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய‌ பகுதிகளில் சேதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர், நாகை மாவட்டங்களில் சில பகுதிகளின் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, திருவாரூர், ஆண்டிபந்தல், சன்னாநல்லூர், நன்னிலம், குடவாசல், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய பகுதியில் மழை பெய்து வருகிறது. திருச்சியில் லால்குடி, புன்னம்பாடி, கல்லக்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் பகுதிகளில் மழை பெய்துள்ளது. சில உள் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், புயல் கரையை தொட ஆரம்பித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்த பேட்டியில், “கஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 16.8 கிமீ வேகத்தில் இருந்து 10 கிமீ ஆக குறைந்தது. இரவு 10 முதல் 11 மணி அளவில் புயலின் வேகம் அதிகரித்து நாகையில் கரையை கடக்கும். புயலின் மொத்த கண்ணின் அளவு 20 கிமீ. முதலில் புயலின் முன் பகுதி கரையை கடக்கும். அதனை தொடர்ந்து மையப்பகுதியும், பின்னர் பின் பகுதியும் கரையை கடக்கும்” என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com