\
'நமது நாடு மதச்சார்பற்ற நாடு; ஹிஜாப் அவரது உரிமை' - மதுரை சம்பவம் குறித்து தேர்தல் ஆணையர்

'நமது நாடு மதச்சார்பற்ற நாடு; ஹிஜாப் அவரது உரிமை' - மதுரை சம்பவம் குறித்து தேர்தல் ஆணையர்

'நமது நாடு மதச்சார்பற்ற நாடு; ஹிஜாப் அவரது உரிமை' - மதுரை சம்பவம் குறித்து தேர்தல் ஆணையர்
Published on

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதான வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்கு கூடுதல் நேரம் வழங்கப்படாது என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த பழனிகுமாரிடம், 'மதுரை மேலூர் 8வது வார்டில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்கச் சென்ற பெண்ணுக்கு பாஜக பிரமுகர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே?' என்று கேள்வி கேட்டதற்கு, 'மாவட்ட ஆட்சி தலைவரிடம் அறிக்கை கேட்டிருக்கிறேன். நடவடிக்கை எடுக்கவும் கூறியிருக்கிறேன்.

நமது நாடு மதச்சார்பற்ற நாடு. ஆடை அணிவது அவரவர் உரிமை. இது நம் அரசியலமைப்புச்சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது. அதனால் உரிய விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியர் அறிக்கை சமர்ப்பிப்பார்'' என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com