“ஒவ்வொருவரின் பாதுகாப்பும் பிரதமர் கையில் உள்ளது” - பியூஷ் கோயல்

“ஒவ்வொருவரின் பாதுகாப்பும் பிரதமர் கையில் உள்ளது” - பியூஷ் கோயல்

“ஒவ்வொருவரின் பாதுகாப்பும் பிரதமர் கையில் உள்ளது” - பியூஷ் கோயல்
Published on

நாட்டில் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் பிரதமரின் கையில் தான் உள்ளது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

தருமபுரியில் புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அடிக்கல் நாட்டினார். மொரப்பூர் - தருமபுரி புதிய ரயில் பாதைக்கு அடிக்கல் நாட்டிய அவர், எழும்பூர் - கொல்லம் ரயில் சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தார். மேலும், தாம்பரம் - நெல்லை அந்த்யோதயா ரயில் சேவையை நாகர்கோவில் வரை நீட்டிப்பதையும் அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், நமது வளர்ச்சிக்கான தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்கிறோம் என்றும், நம் நாட்டில் உள்ள பொறியாளர்கள் மிகவும் திறமை உள்ளவர்களாக இருக்கின்றனர் எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார். அதுமட்டுமின்றி நாட்டில் ஒவ்வொருவரின் பாதுகாப்பு பிரதமர் கையில் தான் உள்ளது என்றார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com