ஆதரவற்றவராக வந்தவருக்கு 45 ஆண்டுகளாக அடைக்கலம்.. ஊர்கூடி நல்லடக்கம் செய்த கிராமத்தினர்!

வந்தவாசி அருகே கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு ஆதரவற்றவராக வந்தவருக்கு பெயர் வைத்து சோறுபோட்டு பராமரித்ததோடு இறந்த பின்பு கிராமமே சொந்தம் கொண்டாடி நல்லடக்கம் செய்தனர்.
Village people
Village peoplept desk

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்திற்கு சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து யாரும் இல்லாத ஆதரவின்றி தேடி ஒருவர் வந்தார்.

அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மாம்பட்டு கிராமத்தினர் சபரிமுத்து என பெயர் வைத்து நாள்தோறும் அவருக்கு உணவு வழங்கி வளர்ந்து வந்தனர்.

இந்நிலையில், அந்த கிராம மக்களோடு ஒருங்கிணைந்து ஒன்றிணைந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்த சபரிமுத்து, வயது முதிர்வு காரணமாக உடல் நலிவுற்று இருந்துள்ளார்.

இதையடுத்து அவரை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த கிராம மக்கள் மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், சபரிமுத்து உடல்நிலை மோசமானதை அடுத்து நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து அனாதையாக வந்த நபரை வளர்த்து வந்த அந்த கிராம இளைஞர்களும் கிராமத்து மக்களும் ஒன்றிணைந்து தங்கள் வழக்கப்படி இறுதி மரியாதை ஊர்வலம் நடத்தி சபரிமுத்துவின் உடலை நல்லடக்கம் செய்தனர்.

அனாதையாக வந்த சபரிமுத்து உடலை 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி வெடி வெடித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்த நிகழ்வு நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com