\
மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்
Published on

விருதுநகரில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது. 

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி தேவகி. இவர் கடந்த 17ம் தேதி விபத்தில் சிக்கி மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த தேவகி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

ஆனால் தேவகியின் சிறு நீரகங்கள், கல்லீரல், கண்கள் நல்ல நிலையில் இருப்பதால் உடலுறுப்பு தானம் செய்து சிலருக்கு மறு வாழ்வு கொடுக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல் உறுப்பு தானத்துக்கு தேவகியின் கணவர் ஒப்புக்கொள்ள, சுமார் 5 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் தேவகியின் உடலுறுப்புகள் அகற்றப்பட்டு,  5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.  

அதன்படி ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வெவ்வேறு நோயாளிகளுக்கும், மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலி கிட்னி கேர் சென்டரில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு பொருத்தப்பட்டன. கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தானமாக கொடுக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com