உடல் உறுப்பு தானத்தில் 3-வது முறையாக தமிழகம் சிறந்த மாநிலம்
உடல் உறுப்பு தானத்தில் 3-வது முறையாக தமிழகம் இந்தியவிலேயே சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் நடந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தால் விபத்தில் பலியானவர்களின் உறுப்புக்களை பிறருக்கு மாற்றுவது அதிகரித்து வருகிறது. இதனால் கண் தானம் என்பதை தாண்டி உடல் உறுப்பையே தானம் செய்வதில் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று புதுடெல்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் சார்பாக நடைபெற்ற 8 வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில், உடல் உறுப்பு தானத்தில் தமிழக அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்றதற்கான விருதினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் தமிழக மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினார். இதனால் உறுப்பு தானத்திலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வாகியுள்ளது.