உடல்உறுப்பு தானம்: அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு கிடைப்பதிலை; தனியாருக்கே முதலிடம்! அதிர்ச்சி தகவல்

மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து தானமாகப் பெறப்படும் உடல் உறுப்புகள் பெரும்பாலும் பணக்கார நோயாளிகளுக்கே செல்லும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானமாக பெற வரிசையில் காத்திருக்கும் நோயாளிகளின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.
மதுரை அரசு மருத்துவமனை
மதுரை அரசு மருத்துவமனைWebTeam

கடந்த 15 ஆண்டுகளில் தனியார் மருத்துவமனைகளில் 126 மருத்துவமனைகள் மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான அனுமதி பெற்றிருக்கையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய 38 மருத்துவ கல்லூரிகளில் வெறும் 13 மருத்துவகல்லூரிகளில் தான் இந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது என்பது வேதனையளிக்கிறது.

மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செயல்படுத்துவதில் தேசிய அளவில் தமிழக சுகாதாரத்துறை தொடர்ச்சியாக பல விருதுகள் வாங்கி குவித்து முதன்மையாக திகழ்ந்தாலும், ஏழை நோயாளிகள் பொறுத்துவரையில் இத்திட்டம் தோல்வியே, ஏழை எளிய சாமானியர்களுக்கு இத்திட்டம் எட்டாக்கனியாக இருப்பது வேதனை அளிக்கிறது.

2008ம் ஆண்டு சென்னையில் மருத்துவ தம்பதியினர் ஹிதேந்திரன் இரு சக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். பெற்றோர்கள் சம்மதத்துடன் மகனின் இருதயம், கல்வீரல், சிறுநீரகம் என்று ஆறு உறுப்புகள் அறுவை சிகிச்சைகள் மூலம் தானமாக பெறப்பட்டு, உறுப்புகள் செயலிழந்து உயிருக்கு மரணத்தோடு போராடி கொண்டிருந்த ஆறு நோயாளிகளுக்கு பொறுத்தி காப்பாற்றப்பட்டனர். துக்க நேரத்திலும் தன் மகள் இறந்தாலும், பிறர் மூலம் வாழ்ந்துகொண்டிருப்பான் என்ற பெற்றோர்களின் முடிவு அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது. இச்சம்பவம் நாடெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதன்பிறகு அரசு மூளைச்சாவு உறுப்பு மாற்று உடல் தானங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். உயிருக்கு போராடும் பலர் உயிர் பிழைக்க வேண்டும் என்று உயர்ந்த நோக்கத்தோடு மூளைச்சாவு உடல் உறுப்பு தானங்கள் தமிழ்நாட்டில் கடந்த 2008ல் சுகாதாரத்துறை மேற்பார்வையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின்படி தமிழகத்தில் ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு ஒவ்வொரு உறுப்பிற்கும் தனித்தனியாக அரசு சுகாதாரத்துறையிடம் பெறவேண்டும் என்பது விதிமுறைகளாகும்.

இத்திட்டம் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையில் அனுமதி பெற்றுள்ள மருத்துவமனைகள் பட்டியல், தானம் பெறுவதில், பிற நோயாளிகளுக்கு. உறுப்புகள் பொறுத்துவதில் அனைத்திலும் அரசு மருத்துவமனைகளை பின்னுக்கு தள்ளி 85 சதவீதத்திற்கு மேல் தனியார் மருத்துவமனைகளே ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.

இதுவரை தமிழ்நாட்டில் சிறுநீரகத்திற்கு 97 மருத்துவமனைகள் அனுமதி பெற்றுள்ள நிலையில் அதில் 86 தனியாரும் வெறும் 11 அரசு மருத்துவமனைகளும், கல்லிரலுக்கு 49 மருத்துவமனைகள் அனுமதி பெற்றுள்ள நிலையில் 44 தனியாரும், வெறும் 5 அரசும். இருதயத்திற்கு 33 மருத்துவமனைகள் அனுமதி பெற்ற நிலையில் 29 தனியாரும். 4 அரசும், அதே போல் நுரையீரலுக்கு 25 மருத்துவமனைகளில் 23 தனியாரும்,வெறும் 2 அரசு மருத்துவமனைகள் என்று அனுமதி பெற்றவர்களில் தனியார் மருத்துவமனைகள் முன்னிலையில் உள்ளனர். இதே போல் இதய வால்வு, தோல், கண்கள், கனையம் என்று அனைத்து உறுப்புகளுக்கான அனுமதி பெற்றதில் தனியார் மருத்துவமனைகளே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

அதே போல தானம் பெற்ற மருத்துவமனைகளில் எண்ணிக்கையில் கடந்த 15 ஆண்டுகளில் மொத்தம் 1650க்கும் மேற்பட்டவர்கள் தானமாக அளித்துள்ளனர். அதில் அரசு மருத்துவமனைகள் பெற்ற தானங்களின் எண்ணிக்கை சுமார் 250 மட்டுமே, இதுவே தனியார் 1350க்கும் மேற்பட்டவர்களிடம் தானமாக பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இதன் மூலம் தமிழகத்திற்கு 10003(பத்தாயிரம்) உறுப்புகளுக்கு மேல் தானமாக கிடைத்துள்ளது. அவற்றில் சுமார் 9000 உறுப்புகளுக்கு மேல் தனியார் மருத்துவமனைகளில் வசதிபடைத்த நோயாளிகளுக்கு பொறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு நோயாளிகளிடமிருந்தும் பல லட்சங்கள் கட்டணமாக பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

தமிழகத்தில் 38 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் செயல்படும் வரும் நிலையில் வெறும் 13 மருத்துவமனைகளில் மட்டுமே ஆமை வேகத்தில் இத்திட்டம் செயல்படுத்துப்பட்டு வரும் நிலையில் 126 தனியார் மருத்துவமனையில் இத்திட்டம் செயல்படுகிறது.

WebTeam

தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையில் அனுமதி பெற்றுள்ள மருத்துவமனைகள் பட்டியல், தானம் பெறுவதில், பிற நோயாளிகளுக்கு உறுப்புகள் பொறுத்துவதில் அனைத்திலும் அரசு மருத்துவமனைகளை பின்னுக்கு தள்ளி 85 சதவீதத்திற்கு மேல் தனியார் மருத்துவமனைகளே ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். இதுவரை தமிழ்நாட்டில் சிறுநீரகத்திற்கு 97 மருத்துவமனைகள் அனுமதி பெற்றுள்ள நிலையில் அதில் 86 தனியாரும், வெறும் 11 அரசு மருத்துவமனைகளும், கல்லீரலுக்கு 49 மருத்துவமனைகள் அனுமதி பெற்றுள்ள நிலையில் 44 தனியாரும், 5 அரசும், இருதயத்திற்கு 33 மருத்துவமனைகள் அனுமதி பெற்ற நிலையில் 29 தனியாரும், 4 அரசும். அதே போல் நுரையீரலுக்கு 25 மருத்துவமனைகளில் 23 தனியாரும், 2 அரசு மருத்துவமனைகள் என்று அனுமதி பெற்றவர்களில் தனியார் மருத்துவமனைகள் முன்னிலையில் உள்ளனர்.

WebTeam

இதே போல் இருதய வால்வு, தோல், கண்கள், கனையம் என்று அனைத்து உறுப்புகளுக்கான அனுமதி பெற்றதில் தனியார் மருத்துவமனைகளே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் உறுப்புகள் தேவை என்று பதிவு செய்துவைப்பவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளது.

சென்னையை தவிர்த்து தமிழகத்தில் பிற பகுதிகளான மதுரை, கோயமுத்தூர், திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி நகரங்களில் செயல்படும் முக்கிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிறுநீரகம், கல்லீரல், இருதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தேவையென்றிருக்கும் நோயாளிகளுக்கு தானமாக பெறுப்படும் உறுப்புகள் கிடைக்கபெறுவதில்லை. இதே நகரங்களில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதிபடைத்த நோயாளிகளுக்கு கிடைக்கின்றன.

இதனால் பெரும்பான்மையாக வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே உடல் உறுப்பு தானம் பெறலாம் என்ற நிலை உள்ளது. இது முற்றிலும் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும், மருத்துவம் என்பது ஏழை பணக்காரர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமானதாகும். மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செயல்படுத்துவதில் தேசிய அளவில் தமிழக சுகாதாரத்துறை தொடர்ச்சியாக பல விருதுகள் வாங்கி குவித்து முதன்மையாக திகழ்ந்தாலும், ஏழை நோயாளிகள் பொறுத்துவரையில் இத்திட்டம் தோல்வியே, ஏழை எளிய சாமானியர்களுக்கு இத்திட்டம் எட்டாக்கனியாக இருப்பது வேதனை அளிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com