திருமண வரவேற்பில் 'உடல் உறுப்புதானம்' கோவையில் புதுமை !

திருமண வரவேற்பில் 'உடல் உறுப்புதானம்' கோவையில் புதுமை !

திருமண வரவேற்பில் 'உடல் உறுப்புதானம்' கோவையில் புதுமை !
Published on

உடல் உறுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பலரையும் உடல் உறுப்பு தானம் அளிக்கும் வகையில் புதிய முயற்சியில் கோவையில் புதுமையான திருமணம் நடைபெற்றது. 

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொழிலதிபரான இமயவன் - அஞ்சுகம் என்பவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழச்சியில் தன்னார்வு தொண்டு நிறுவனம் மூலம், திருமண வீட்டாரின் சார்பில் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரங்கு அமைக்கபட்டு இருந்தது. திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் உடல் உறுப்பு தானம் குறித்து கேட்டறித்ததுடன் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்து கொண்டனர். 


திருமண விழாக்களில் உறவினர்களையும், நண்பர்களையும் பார்த்து மகிழ்ச்சியடைவதோடு மட்டுமில்லாமல் உடல் உறுப்பு தானம் போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக திருமண விழாவிற்கு வந்திருந்தவர்கள் தெரிவித்தனர். 

இதுபோன்று அனைத்து விஷேச நிகழ்வுகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினால் உடல் உறுப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கு பயனுள்ளவகையில் இருக்கும். தங்கள் இல்லங்களில் நடக்கும் விழாக்களிலும் இது போல உடல் உறுப்புதான நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்து இருப்பதாக திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். வழக்கமாக திருமணம் போன்ற விழாக்களில் இறப்புபற்றி  பேசுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்த திருமண வரவேற்பு விழாவில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.


 
உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த  திருமண அழைப்பு கொடுக்கும்போதே இது போன்ற உடல் உறுப்புதான நிகழ்ச்சி நடைபெறுவது குறித்தும் தம்பதியின் உறவினர்கள் தெரிவித்து உள்ளனர். குடும்ப விழாக்களில் இது போன்ற நிகழ்வுகள் நடத்தும்போது அறியாமை உடைந்து விழிப்புணர்வு ஏற்படும் என்பதற்காகவே தங்கள் திருமண வரவேற்பில் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தோம் என்று தம்பதியினர் கூறி உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com